ரஜினி விஜய் போர் எப்போது தொடங்கியது .


தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகவும் திகழ்ந்து வருகிறார் சூப்பர் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த்.



80 களிள் தொடங்கி 90 களின் இறுதி வரை தமிழ் சினிமாவிற்கும் சரி இவருக்கும் சரி பொற்காலம் தான்.
90 களின் ஆரம்பத்தில் அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவெடுக்க தொடங்கினார்கள் அதில் பிரசாந்த், பிரபுதேவா, அப்பாஸ், அரவிந்த் சாமி, அருன் விஜய், அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் அறிமுகமானார்கள்.





90களின் இருதிவரை இவர்கள் யாராலும் ரஜினியின் அருகில் கூட வரமுடியவில்லை.2000 ஆண்டுக்கு பிறகு சினிமா அடுத்த பரிணம
 வளர்ச்சியை நோக்கி நகரதொடங்கியது.


             விஜய் அஜித்



90 களில் அறிமுகமான நடிகர்களில் விஜய் அஜித் மட்டுமே அடுத்த பத்தாண்டுகளுக்கு தாக்குப்பிடித்தனர்
ரஜினி கமல் போன்று இருமுனை போட்டி இவர்களுக்குள் ஆரம்பமானது. ரஜினி ஆண்டுகளுக்கு ஒரு படம் என நடிக்க தொடங்கினார் . இந்த காலகட்டத்தில் இருவரும் மாறி மாறி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தனர்.

                     
                             விஜய் 


2010 வரை இருவரும் சமமான வெற்றியைப் பதிவு செய்தார்கள்.அடுத்தடுத்த ஆண்டுகளில் விஜய் அஜித்தை விட அதிக வெற்றிகளையும் அதிக சம்பளம் பெறும் நடிகரா வலம்வர தொடங்கினார்.சொல்லபோனால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.

                   ரஜினி விஜய்


2004 ஆம் ஆண்டு விஜயின் கில்லி படம் வெளியாக முதல் 50 கோடி வசூலை கடந்த நடிகர் என்ற சாதனையை பதிவு செய்தார்.தமிழ்       சினிமாவே ஆச்சர்யபட்டது . ஏனென்றால் அதுவரை
ரஜினி படங்கள் கூட அந்த சாதனையை செய்யமுடியவில்லை. அந்த காலகட்டத்தில் தான் ரஜினியோடு விஜயை ஒப்பிட்டு பேச ஆரம்பித்தனர். 2010 தொடங்கி 2018 வரை விஜய் அதிக வெற்றிப்படங்களை கொடுத்து இந்தியா முழுவதும்      தெரிந்த     முகமாக மாறினார்.ரஜினி இந்த காலகட்டத்தில் சுமாரான படங்களையே கொடுத்து வந்தார் .இருந்தபோதிலும் சம்பள விஷயத்தில் ரஜினி முதலிடத்திலும் விஜய் இரண்டாவது இடத்திலும் இருந்தார். அடுத்தடுத்து வந்த படங்களில் வி‌ஜய் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பித்தார். 40 ஆண்டுகால சினிமா பயணத்தில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜய் தான் வசூலிலும் ரஜினியை தான்டி விட்டார்.என்னதான் ஜெயிலர் படம் மாபெரும் வசூல் சாதனை செய்தாலும்  சம்பள விஷயத்தில் விஜய் தான் முன்னிலையில் உள்ளார்.                                                                                            உண்மையில் சொல்லப்போனால் ரஜினி கமல் என்ற இரு ராஜாக்களுக்கு இடையே ஒரு ராஜாங்கத்தையே நடத்தியுள்ளார் தளபதி விஜய்..




Comments