ரஜினி விஜய் போர் எப்போது தொடங்கியது .
தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகவும் திகழ்ந்து வருகிறார் சூப்பர் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த். 80 களிள் தொடங்கி 90 களின் இறுதி வரை தமிழ் சினிமாவிற்கும் சரி இவருக்கும் சரி பொற்காலம் தான். 90 களின் ஆரம்பத்தில் அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவெடுக்க தொடங்கினார்கள் அதில் பிரசாந்த், பிரபுதேவா, அப்பாஸ், அரவிந்த் சாமி, அருன் விஜய், அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் அறிமுகமானார்கள். 90களின் இருதிவரை இவர்கள் யாராலும் ரஜினியின் அருகில் கூட வரமுடியவில்லை.2000 ஆண்டுக்கு பிறகு சினிமா அடுத்த பரிணம வளர்ச்சியை நோக்கி நகரதொடங்கியது. விஜய் அஜித் 90 களில் அறிமுகமான நடிகர்களில் விஜய் அஜித் மட்டுமே அடுத்த பத்தாண்டுகளுக்கு தாக்குப்பிடித்தனர் ரஜினி கமல் போன்று இருமுனை போட்டி இவர்களுக்குள் ஆரம்பமானது. ரஜினி ஆண்டுகளுக்கு ஒரு படம் என நடிக்க தொடங்கினார் . இந்த காலகட்டத்தில் இருவரும் மாறி மாறி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தனர். ...